search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் மனிதசங்கிலி"

    ஜெயங்கொண்டம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை ஒட்டி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கழுத்தில் மஞ்சள் நிற துணிப்பையை அணிந்து கோஷங்கள் எழுப்பியவாறு மனித சங்கிலியில் நின்றனர், 
    மேலும் பிளாஸ்டிக் பைகளை உடையாக அணிந்த ஒருவரை பாரத மாதா சூலம் கொண்டு விரட்டும் வகையில் இரண்டு மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.

    இதனை அடுத்து மரங்கள் நட வேண்டும், மரத்தால் கிடைக்கும் நன்மைகள், இருக்கும் மரங்களை பாதுகாப்பது போன்ற சிறிய நாடகத்தை மாணவர்கள் பள்ளியின் அருகே சாலை யோரத்தில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அதிகாரி விஜய லட்சுமி  தொடங்கி  வைத்தார், நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அதிகாரி இளங்கோவன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன், தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான செங்குட்டுவன் செய்திருந்தார்.
    ×